திருக்குறளில் அறம்
திருக்குறளில் அறம் திருக்குறள் தமிழில் தோன்றிய தலைசிறந்த அறநூல். தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நூல். 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. தமிழரின் பண்பாட்டைப் பறைசாற்றும் அறநூல். வேதாத்திரி மகரிஷி அவர்களும் 50 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விளக்கங்களாக ஒரு நூல் வெளியிட்டுள்ளார்கள். ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்’ என்ற தலைப்பில் வள்ளுவரின் உள்ளக் கருத்தை அப்படியே காட்டியுள்ளார். வள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறம் துறவறம் எனப் பகுத்து இல்லறத்துக்கு முதன்மை கொடுத்து இருவகையாருக்கும் தனித்தனியாகவும் பொதுவாகவும் அறங்கள் கூறியுள்ளர். அருட்தந்தை வேதாத்திரி மாத்துறவி அவர்களின் கருத்துக்களையும் மனதில் கொள்வோம். வள்ளுவர் அறத்துப்பாலில் பாயிரம் 4 அதிகாரங்கள் , இல்லறவியல் 20 அதிகாரங்கள், துறவறவியல் 13 அதிகாரங்கள், ஊழ் 1 அதிகாரம், என 38 அதிகாரங்கள் செய்துள்ளார். இதில் அறம் என்பதற்கு விளக்கமாக முத்திரை பதித்தாற்போலும் வைர வரிகள் சில உள்ளன. வள்ளுவர் இறைவனை ‘அறவாழி அந்தணன்’ என்றும் அவர் பண்பை ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்றும் குறிப்பிடுகிறார். “சிறப்...